ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் ! ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு.aanmai kuraivai sari seyya

ads
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். ஆண்மைக்கான சுரப்பிகள் சுரப்பதால், இயற்கையாக ஆண்கள் வலிமையாகவும், பலமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், இல்லையேல் ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். காம இச்சை அதிகரிக்கும் இக் காலகட்டத்தில் அவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருப்பவராக இருந்தால், சில ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு தமது விந்துவை வெளியேற்றும் செயல்களும் உள்ளது.

இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும். சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. இந்த நோயில் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும். புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவற்றைத் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.
ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுகிறது ?
1 வது காரணமே பயம் தான். எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா ? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை இழக்கிறான். குறிப்பாக இது இளமைப் பருவத்தில் பல ஆண்களுக்கு நடந்திருக்கும். தமது நண்பர்களோடு சிலவேளை சற்றும் எதிர்பார்க்காமல் அவர்கள் சிவப்பு விளக்கு ஏரியாவுக்குச் சென்றிருப்பார்கள். அங்குள்ள விலைமாதுவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவளுடன் படுக்கப் போனால், பயம் தொற்றிக்கொள்ளும். இதனால் ஆண் குறி சரியாக விறைப்படையாது. இதனை நினைத்தே, மேலும் கவலைப் பட, பின்னர் உடலுறவு கொள்ளமுடியாமல் ஏற்படும். பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு திரும்பி இருப்பார்கள். எனவே மனதில் பயம் இருக்கக்கூடாது.
2. அன்ரி பயோட்டிக்ஸ் மாத்திரைகள். மற்றும் பிற மாத்திரைகள். சிலர் சாதாரண தடிமன் காச்சல் வந்தாலே, ஆன்ரி பயோட்டிக்ஸ் எடுப்பார்கள். சாதாரண நோவுக்கு கூட பாரிய வலியைப் போக்கும் மருந்துகளை எடுப்பார்கள். எனவே தேவையற்ற மருந்துகளைக் குறைப்பது நல்லது
3. மது, புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பாவித்தல், ஆண்மைக் குறைவுக்கு மூல காரணமாக உள்ளது. மதுப் பழக்கம் காரணமாக ஆணுறுப்பு சுருங்கும், இல்லையேல் விறைப்புத் தன்மை குறையும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
ஆண்மையை அதிகரிக்க என்ன செய்யலாம் ?
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும் என்று சிலர் கூறுவது மிகவும் தவறான விடையம் ஆகும். இது சற்று வயது முதிர்ந்தவர்களுக்குப் பொருந்தும். ஆனால் இளவயதில் உள்ளவர்கள் 14- தொடக்கம் 35 வயதுவரை உள்ளவர்கள், வாரத்தில் 4 முறைகூட விந்தை வெளிப்படுத்தலாம்.
பேரீச்சம் பழம் மிகவும் அருமையான மருந்தாக அமைகிறது. பேரீச்சம் பழம் என்பது எல்லாக் கடைகளில் விற்கும் பேரீச்சம்பழத்தை நினைக்கவேண்டாம். பொதுவாக அரபு நாடுகளில் இப் பழத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள சக்கரைத் தண்ணீரை எடுத்துவிட்டுப் பின்னர் அதன் சக்கையைதான் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இது உண்மையான பேரீச்சம்பழம் அல்ல. பொதுவாக நல்ல கடைகளில் உலர்ந்த பேரீச்சம்பழம் கிடைக்கும். அதனை வாங்கி பாலுடன் உட்கொண்டால் போதும். தினமும் 5 பேரீச்சம்பழத்தை பாலுடன் உட்கொண்டு வந்தால் 15 நாட்களில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். அத்தோடு பாதாம் பிஸ்தா போன்றவையும் உண்ணலாம்.
கோழி ஆட்டு இறைச்சி போன்ற உணவுகளைத் தவிர்த்து , சுறா மீன், காடை மற்றும் நண்டு போன்ற உணவுகளை உண்ணலாம். இதில் ஆண்மையை அதிகரிக்கும் பல தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளது.

ads
Powered by Blogger.