பெண்களை தூண்டும் முறைகள் எது தெரியுமா? penkalai thundum murai
Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex uraipadukalதாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா? அதை முதலில் தெரிந்து கொண்டு பின்பு படிப்படியாக முன்னேறுங்கள். சரி இந்த தாம்பத்தியத்திய உறவின்போதோ அல்லது சாதாரண நேரங்களிலோ, உங்கள் துணையை அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தமிடுங்கள், அவர்களை நீங்கள் பாராட்டுவதாக இருந்தால், அதிக பரிசாகவும், அவர்கள் ஏதேனும் ஒருபிரச்சனையில் சிக்கியிருக்கும்போது, நீங்கள் கொடுக்கும் ஒரு முத்தம், அவர்களுக்கு தன்னம்பிக்கையும், நல்ல ஒரு உத்வேகத்தையும் கொடுக்கும்.
பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் முத்த வகைகள்
என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல் வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு.
அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாத வராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி டைவர்ஸ்கூட சுலபமாகக் கிடைத்து விடுகிறது.
ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியா கவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையில், தாம்பத்திய உறவு என்பது ஈர்ப்பும் ஆர்வமுமற்ற ஒரு விஷயமாக, ஏதோ குளிப்பதுபோல் ஒரு கடமையாக அல்லது கோடை மழைபோல் சட்டென்று கொட்டி அடங்கிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது.
ஆர்வமற்ற இதுபோன்ற தாம்பத்திய உறவு இருக்கும் தம்பதியர்களுக்குள், மற்ற எந்த விஷயத்திலும் கூட பெரிய நெருக்கம் இருப்பதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
சரி.. சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈர்ப்பும் ஆர்வமும் ஏன் குறைகிறது?
கணவனோ அல்லது மனைவியோ, குறிப்பிட்ட தன்துறையில்தான் வேகமாக முன்னேறவேண்டும் என்ற முனைப்புட ன் ‘வேலை வேலை’ என்று கவனம் முழுக்க வேலை பற்றியே சிந்திக்கும்போது, தாம்பத்திய உறவில் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போகலாம்.
அதிக வேலை அல்லது சரியான நேரத்தில் முடியாத வேலையால் ஏற்படும் உடல் அசதியும் கூட இது போன்ற ஆர்வமின்மைக்கு இட்டுச் சொல்லலாம். கணவருக்கோ மனைவிக்கோ ஒருவரைப் பார்த்தவுடன் மற்றவருக்கு கிளர்வான உணர்வை ஏற்படுத்தும் டோப்பாமைன், நைட்ரிக் ஆக்ஸைடு, ஆக்ஸிடோஸின், டெஸ்டோஸ்டி ரான்போன்ற சமாச்சாரங்கள் உடலில் போதுமான அளவில் இல்லாமல் குறைவாக சுரக்கும் நிலையும் காரணமாகலாம்.
சில வீடுகளில் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ சில குண நலன்களால் ஒருவர் மேல் மற்றவருக்கு மனசில் மரியாதை இல்லா ஒட்டாத நிலை ஏற்படுவதும் காரணமாகலாம்.
தாம்பத்தியத்தைத்தவிர வெளியே வேறுயாருடனாவது இருக்கும் ஆர் வத்தாலும் இப்படி தம்பதிகளுக்குள் ஈர்ப்பு குறையலாம்.. இது போல் இன்னும் ஏகப்பட்ட காரணங்கள்!
ஆனால், இந்த எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. சொல்லப் போனால் இந்தக் காரணம் பெண்களில் பலருக்கு மிகவும் பொருந்தும்.
அது. தாம்பத்திய உறவு என்பது முறையாக, அதன் சுவாரஸ்யத்துடன் இதமாக அறிமுகம் ஆகாமல் போவதால், அதன்பேரில் சில பெண்களுக்கு ஏற்படும் பயமும் எரிச்சலும் கலந்த கஷ்ட உணர்வு!
எடுத்த எடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாதத்தை அள்ளிப் போட்டால் சாப்பிடத் தோன்றுமா? அந்தப் பாத்திரத்தைப் பார்த்தவுடனே இருக்கும் பசியும் அல்லவா பறந்து போகும்!
என்னதான் பசிக்கு சாப்பிடவேண்டி இருந்தாலும் சாப்பிடத்தூண்டும் வகையில், அதை அழகாகப் பார்வையாக வைத்தால்தான் சாப்பிடும் ஆர்வம் வருகிறது. என்னதான் தேர்வுக்கு மார்க் எடுப்பதற்காக படிக்க வேண்டி வந்தாலும், ஆசிரியர் சுவாரஸ்யமாக சொல்லிக் கொடுத்தால்தான் அதைப் படிக்கவே ஆர்வம் வருகிறது.
அதேபோல்தான்.. என்னதான் மனதை மயக்கும் விஷயமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, இதமாக அதை அறிமுகப்படுத்தும் போது தான் தாம்பத்திய உறவும்கூட பல பெண்களை விரும்பி ஆர்வம் கொள்ள வைக்கிறது.
பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப் படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்ஸ.
இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறை வேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.
அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரி சித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர் கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.
முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லைஸ ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.
முதலில் கணவன் _ மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப் படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.
ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ் கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம் தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!
சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்து ணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்த மிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதி கரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள் கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத் துணர்ச்சி கிடைக்கிறது!
குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையா மல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்து விட்டு, முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய ரத்த ஓட்டத்தில் கலந்து, மனி தர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத்தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.
வேகமான ரத்த ஓட்டம் உடல் திசுக்களுக் கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இரு க்கின்றன என்கிறார் மற்றொரு இத்தாலி நாட்டு நிபுணர்.
‘அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துண ர்ச்சியுடன் இருக்கும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீ ரியாக்கள் சுத்தப்படுத்த ப்படாம ல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிகளவில் எச்சில் சுரப்ப தால், பாக்டீ ரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச் சியுடன் இருக்கிறது.
முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற் கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார் பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.
தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்த மிடுங்கள்!