பேண்ட் போட முடியாத அளவு தொப்பை வந்துடுச்சா…? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க..thoppaiyai kuraikka

ads
இன்றைய காலத்தில் தொப்பையால் கஷ்டப்படுகிறவர்கள் தான் அதிகம். அதிலும் சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை தான்.
இதனால் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புகள் உடலில் ஆங்காங்கு தங்கி தசைகளை தொங்கவிடுகிறது. அப்படி கொழுப்புக்கள் அதிகம் தங்கும் ஒரு பகுதி தான் வயிறு. அதிலும் உட்கார்ந்தவாறே இருப்பதால் கொழுப்புக்கள் எளிதில் சேர்கிறது.
குறிப்பாக ஆண்களுக்கு தான் பேண்ட் போட முடியாதவாறு தொப்பை வந்து பாடு படுத்துகிறது. ஆகவே தொப்பையைக் குறைக்க ஒருசில சிம்பிளான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது.
சரியான தூக்கம்
தினமும் 8 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். ஆய்வு ஒன்றில் 5 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கினால் வயிற்றில் சேரும் கொழுப்புக்களின் அளவை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பின்பற்றவும்
தினமும் சரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தை கொள்ள வேண்டும். முக்கியமாக வார இறுதி நாட்களிலும் இதனை பின்பற்ற வேண்டும்.
புரோட்டீனை அதிகரித்து, கார்ப்ஸ் அளவைக் குறைக்கவும்
உண்ணும் உணவில் புரோட்டீன் அளவை அதிகரித்து, கார்போஹைட்ரேட் அளவை குறைக்க வேண்டும். புரோட்டீன் உணவுகள் உடலில் இன்சுலின் அளவை குறைத்து, அதனால் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும். ஆனால் கார்போஹைட்ரேட் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும். எனவே கவனமாக இருக்கவும்.
டீ குடிக்கவும்
தினமும் டீ குறைந்தது 2 கப் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் உடலுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும். அதிலும் காலையில் காபி குடித்தால், மதியம் மற்றும் இரவில் டீ குடியுங்கள். இதன் மூலம் தொப்பை விரைவில் குறையும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்துள்ள உணவுகளான பீன்ஸ் மற்றும் ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், அது வயிற்றில் சேரும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.
யோகா மற்றும் தியானம்
பெண்கள் வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க சிறந்த வழி யோகா மற்றும் தியானம் செய்வது தான். ஏனெனில் இவற்றை செய்வதன் மூலம் கார்டிசோல் என்னும் ஹார்மோனின் உற்பத்தி குறைந்து, இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, கொழுப்புக்களின் அளவும் குறையும்.
கார்டியோ
கார்டியோ பயிற்சிகளான ஜாக்கிங், நீச்சல்,சைக்கிளிங் போன்றவற்றை செய்து வந்தால், வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும்.

ads
Powered by Blogger.