பெண்குறியை வைத்து அவளின் கன்னித்தன்மையை கணக்கிட முடியுமா?? penkuriyai vaithu kannithanmaiyai kanakida

ads
ஆசியக் கண்டத்தில் பழமைவாத கொள்கைகளில் இன்றைக்கும் பிடிவாதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் திருமணமாகாத ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவளது கன்னித்திரை! அதுதான் ஒரு கன்னிப் பெண்ணின் முகம். முகமில்லாதவர்கள் வாழ முடியாது. கன்னித்திரை இல்லாத பெண்ணுக்கும் வாழ்க்கை இல்லை. ஆனால், உடலைப் பொறுத்த வரை கன்னித் திரைக்கு எந்த வேலையும் இல்லை. உடலில் தேவையில்லாத உறுப்புகள் நிறைய இருக்கின்றன. குடல் வால் என ஒரு பகுதி உடலில் இருக்கிறதே… அதற்கு உடலின் செயல் பாட்டில் எந்த பங்கும் இல்லை. ஏதோ அலங்காரப் பொருள் மாதிரி வீணாக அது உடலில் இருக்கி றது. அது இல்லாமலேகூட உடல் இயல்பாக இருக்கும். அது மாதிரி கன்னித் திரையும் தேவை இல்லாத ஓர் உறுப்புதான்! அது கிழியாமல் இருந்தால், அந்தப் பெண் மட்டும் இதுவரை செக்ஸ் அனுபவிக்காத கன்னிப் பெண் என்றும் அர்த்தமில்லை. (அதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு இப்படி எந்த திரையையும் சிருஷ்டியில் வைக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்!.

மருத்துவ ரீதியாக பார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை கிழிந்து இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித் திரை ஏதோ எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறது. அதனால் இவர்களுக்கு முதல் தடவை உறவின்போது இது கிழியவும் கிழியாது… இரத்தக் கசிவும் இருக்காது… வலியும் இருக்காது! தடய அறிவியல் நிபுணர்கள்தான் இதைக் கண்டு பிடித்தார்கள். விலைமாதர்கள் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர்களில் பலரது கன்னித் திரை கிழியாமல் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிபுணர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இத்தனைக்கும் ஆண்டுக் கணக்கில் தொழி லில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்கள். அதைப் பரிசோதித்த பிறகே இந்த எலாஸ்டிக் சமாச்சாரம் தெரிய வந்தது. இந்த இரண்டு ரகம் தவிர, இன்னொரு பதினோரு சதவிகிதம் பெண்களுக்குக் கன்னித் திரை மிகவும் மெல்லியதாக இருப்பதால் சின்ன வயசிலேயே கிழி ந்து விடும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பைக்கில் காலைத் தூக்கிப்போட்டு உட்காரும்போதோ, சைக்கிள் ஓட்டும் போதோ இது சிம்பிளாகக் கிழிந்து விடும். இவர்களில் சிலர் கன்னித்திரை என்ற பாகமே இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதும் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை. மொத்தத்தில் பார்த்தால், ஐம்பத்தெட்டு சதவிகிதம் பெண்களுக்கு கன்னித் திரை கிழியாது … இரத்தக் கசிவும் இருக்காது. அப்படியிருக்கும்போது… இவர்களை கெட்டுப் போனவர்கள் என முத்திரை குத்து வது எவ்வளவு பெரிய கொடுமை!

பெண்களின் பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க மேல்ப க்கம் ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்களே… அது மாதிரி மெல்லிய சவ்வு இது! இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும் பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது இரத்தம் வெளியேறுவதற்காக இந்த வடிவம். சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது இரத்தம் வெளியில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர்களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள்.

இல் லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். கன்னித் திரையை அகற்றப் போகிறோம் என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரேஷனை டாக்டர்கள் செய்வார்கள். பின்னால் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணம்! வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரி பெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள். திருமணத்துக்கு முன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். இதன் பிறகு முதலிரவின்போது இரத்தக் கசிவும் இருக்கும்… தாங்க முடியாமல் வலியும் இருக்கும். செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண் நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள் என கணவர் பெருமைப்பட்டுக் கொள்வார். இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்திய நாடுகளுக்குப் போகிறார்கள்.

அமெரிக்கப் பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! இருபதாவது திருமண நாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும் ஜோடிகள் அங்கே நிறைய! இது ஒரு பக்கம் என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது. எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும் விலைமாதர்களுக்கு மவுசு அதிகம். பணக்கார கஸ்டமர்கள் இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித் தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரே வித்தியாசம்… பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை.

சுய இன்பம், பிற வழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன் ஆண்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் கன்னித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். டெக்னிக்கல் கன்னிப் பெண்கள் என இவர்களைச் சொல்லலாம். மகாராணி ஏமாற்றி விட்டு வேறு யாருடனோ செக்ஸ் உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கும் ஒரு மன்னர் தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு செக்ஸ் அனுபவித்து விட்டு, மறுநாள் அந்தப் பெண்ணைக் கொன்று விடுவார். காரணம்… அவளும் அவரை ஏமாற்றக் கூடாது என்பதுதான்! புகழ் பெற்ற செக்ஸ் புத்தகமான ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதை இது. இப்படி சந்தேக மன்னர்களாக ஆண்கள் இருந்தால், கன்னித் திரை பொருத்தும் ஆபரேஷன்கள் நம்முடைய குக்கிராமத்தில்கூட பாப்புலர் ஆகக் கூடும்.

ads
Powered by Blogger.