பீர் குடித்து வந்த தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்! peer kudithu vantha thoppaiyai kuraikka

ads
ஆண்களின் விருப்பமான பானம் என்றால் அது பீர் என்று சொல்லலாம். ஆண்களுக்கு கண்ட உணவுகளை உட்கொண்டு தொப்பை வந்ததை விட, பீர் குடித்து வந்த தொப்பை தான் அதிகம் இருக்கும். அப்படி வந்த தொப்பையைக் குறைக்க நிறைய ஆண்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். அதில் ஜிம் செல்வது, டயட் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆனால் நம் இந்தியாவில் தோன்றிய பழங்கால கலையான யோகாசனங்களை தினமும் செய்து வருவதன் மூலம், தொப்பையை சீக்கிரம் குறைப்பதோடு, நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என்பது தெரியுமா? அதிலும் மிகவும் எளிமையான யோகாக்களை செய்து வந்தாலே பீர் மூலம் வந்த தொப்பையைக் குறைக்கலாம்.
சரி, இப்போது பீர் குடித்து வந்த தொப்பையைக் குறைக்க உதவும் அந்த எளிய யோகாசனங்கள் எவையென்று பார்ப்போம். அதைப் படித்து தினமும் பின்பற்றி கச்சிதமான உடலைப் பெறுங்கள். முக்கியமாக இவை ஆண்களுக்கு ஏற்ற சிறப்பான யோகாசனங்களும் கூட.
சலபாசனம் (Salabhasana)
சலபாசனம் செய்வதற்கு முதலில் தரையில் குப்புறப் படுத்து, கைகளை படத்தில் காட்டியவாறு வயிற்றுக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டு கால்களையும், மேலே உயர்த்த வேண்டும். முக்கியமாக இப்படி கால்களைமேலே தூக்கும் போது மூச்சை உள்ளிழுத்து 20 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டு பழைய நிலைக்கு வர வேண்டும். இதனால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறையும்.
அதோ முக சவனாசனம் (Adho Mukha Svanasana)
இது அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் சிறந்த ஆசனம். இதனால் வயிற்றுத் தசைகள் இறுக்கப்படுவதோடு, தோள்பட்டை, கைகள், முதுகு, தொடைகள் போன்றவை வலிமையடையும். இதற்கு முதலில் நேராக நின்று, தரையில் கைகளை ஊற்றி இருக்க வேண்டும்.
பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana)
இந்த ஆசனத்தால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, வயிறு, தொடை மற்றும் இடுப்பு பகுதிகள் இறுக்கமடையும். அதற்கு தரையில் கால்களை முன்னோக்கி நீட்டியவாறு நேராக உட்கார்ந்து, மூச்சை உள்ளிழுத்து தலையால் முழங்காலையும், கைகள் பெருவிரலையும் தொட வேண்டும். பின் மூச்சை வெளியே விட்டு பழைய நிலைக்கு வரவும்.
கும்பகாசனம் (Kumbhakasana)
இது பலகைப் போன்ற நிலையாகும். இதற்கு புஷ்-அப் நிலையில் இருக்க வேண்டும். இதனால் தொடை, அடிவயிறு, இடுப்பு, கைகள், முதுகு, தோள்பட்டை போன்ற இடங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் குறைந்து, வலிமைப் பெற்று, இறுக்கமடையும்.
தனுராசனம் (Dhanurasana)
இது சக்கரம் போன்ற நிலையைக் கொண்டது. இந்த ஆசனம் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு தரையில் குப்புறப்படுத்து, இரு கைகளால் கணுக்கால்களைப் பிடித்து, உடலை மேலே தூக்க வேண்டும். இப்படி உடலைத் தூக்கும் போது மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளவும். பின் 10 நொடிகள் கழித்து, மூச்சை வெளியே விட்டு பழைய நிலைக்கு வரவும்.
பாலாசனம் (Balasana)
ஆசனங்களிலேயே மிகவும் எளிய ஆசனம் பாலாசனம் தான். இதற்கு முட்டிப் போட்டு, தரையில் உட்கார்ந்து, கைகளை பின்னே கட்டிக் கொண்டு, நெற்றியால் தரையைத் தொட வேண்டும். இதனால் தொப்பை குறைவதோடு, தலைக்கு இரத்த ஓட்டம் அதிகம் சென்று, புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.

ads
Powered by Blogger.