வாய் துர்நாற்றத்தால் அவதியா? தடுப்பதற்கான எளிய வழிகள்

ads
நம்மில் பெரும்பாலானோர் வாய் துர்நாற்றம் காரணமாக முக்கிய நேரங்களில் அவதி பட்டிருப்போம். இதன் காரணமாக அதிக நபர்கள் நிறைந்த இடங்களில் பேசுவதை கூட தவிர்த்திருப்போம்.
இனி வாய் துர்நாற்றத்தை கண்டுஅஞ்ச தேவையில்லை. அவற்றை தவிர்ப்பதற்காக சில எளிதான வழிகள் உள்ளன.
* முதலில், ஒரு நாளைக்கு காலை இரவு என இரு முறை பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திகொள்ளுங்கள். இதனால் பற்களில் கிருமிகள் சேர்வது தடுக்கப்படுகிறது.
* வாரத்தில் ஒரு நாள் பேக்கின் சோடா பயன்படுத்தி பல்லை துலக்குங்கள். இதனால் அசிடிட்டியின் அளவு குறைந்து பாக்டீரியாவின் வளர்ச்சிகள் தடுக்கப்படும்.
* தினமும் பருகும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்துங்கள். எனென்றால் தண்ணீர் அதிகமாக பருகுவது வாய் துர்நாற்றத்தை சரி செய்யும்.
* மேலும், பற்களை துலக்கும் போது நாக்கையும் சேர்த்து சுத்தம் செய்வது நன்று. இதனால் வாய் முழு சுத்தம் அடைகிறது.
* துளசி, கொத்தமல்லி போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுங்கள். சூயின்கமும் பயன்படுத்தலாம்
* இதனால் வாய் துர்நாற்றம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். மெல்லிய நூல்களை பயன்படுத்தி பற்களை ப்ளாஷ் செய்யுங்கள்.
* ப்ளாஷ் செய்வதன் மூலம் பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத்துகள்கள் வெளியேற்றப்படும்.
* இதனால் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புமும் குறையும்.

ads
Powered by Blogger.